search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை ஏற்றுமதியாளர்"

    • இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வை நோக்கி பயணித்து வருகிறது.
    • அடுத்த 3 மாதங்களில் கிடைக்கும் டாலருக்குபார்வேர்டு கான்ட்ராக்ட் பாதுகாப்பு அளிப்பது நல்லது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு அன்னிய பண மதிப்பு அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 50 சதவீதத்துக்கு மேல் அமெரிக்க டாலரிலேயே நடக்கிறது.

    இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த மார்ச் மாத துவக்கத்தில் 76.91 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு தற்போது 78.17 ரூபாயை எட்டியுள்ளது. டாலரில் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மூலம் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    ஆனாலும் எவ்வளவு காலம் வரை டாலர் மதிப்பில் இதேநிலை நீடிக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாததாக உள்ளது. தற்போதைய மதிப்பிலிருந்து டாலர் மதிப்பு மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. சரிந்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இப்படி ஒரு குழப்பமான சூழலில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளவேண்டும் என விளக்குகிறார் ஆடிட்டர் தனஞ்செயன்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உக்ரைன் போர் எதிரொலியாக அன்னிய பண மதிப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு 78 ரூபாயை எட்டியுள்ளது. இதனால்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆடைக்கு, கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.டாலர் மதிப்பு இதே நிலை தொடரும் என நிச்சயமாக சொல்லிவிட முடியாது.

    வரும் நாட்களில் மேலும் உயர்ந்து 90 ரூபாயை எட்டலாம். 70 ரூபாயாக சரியவும் செய்யலாம்.தற்போதைய சூழல் என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது என்பதை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்*ச.துர்யமாக செயல்படுவது மிகவும் அவசியம். ஏற்றுமதி ஆர்டர்களுக்கு வங்கிகள் வழங்கும் பார்வேர்டு கான்ட்ராக்ட் வசதி மூலம் பாதுகாப்பு அளித்துக்கொள்ளவேண்டும். வரும் நாட்களில் டாலர் மதிப்பு குறைந்தாலும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு உரிய தொகை கிடைத்துவிடும். இழப்பு ஏற்படாமல் தப்பித்துக்கொள்ளலாம். அலட்சியம் காட்டினால், டாலர் மதிப்பு குறையும்பட்சத்தில் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கவேண்டிவரும்.

    அடுத்த 3 மாதங்களில் கிடைக்கும் டாலருக்குபார்வேர்டு கான்ட்ராக்ட் பாதுகாப்பு அளிப்பது நல்லது. நீண்ட கால பார்வேர்டு கான்ட்ராக்ட் மேற்கொள்வது இப்போதைய சூழலில் ஆபத்தில் தள்ளிவிடும்.அதாவதுஅடுத்த ஓராண்டுக்குப்பின் குறிப்பிட்ட அளவு டாலர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பார்வேர்டு கான்ட்ராக்ட் மேற்கொள்ள கூடாது. 78 ரூபாயாக உள்ள டாலர் அடுத்த ஓராண்டில் 80 அல்லது 90 ரூபாயாக உயரலாம். அப்போதுஅந்த மதிப்பு அடிப்படையிலேயே ஆடை தயாரிப்புக்கான பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிவரும். இதனால் ஆடை உற்பத்தி செலவினமும் அதிகரிக்கும்.நீண்ட காலத்துக்கான பார்வேர்டு கான்ட்ராக்ட் மேற்கொண்டால் எதிர்காலத்தில் டாலர் மதிப்பு உயர்ந்தாலும் 78 ரூபாய்தான் கிடைக்கும்.

    இது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் லாபம் இழப்பை ஏற்படுத்திவிடும். நஷ்டத்தை சந்திக்கவேண்டிவரலாம்.ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் தங்கள் நிறுவனத்துக்கு உகந்த பாதுகாப்பு வழிகளை பின்பற்றி இழப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

    ×